சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியலை புதுப்பித்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது T20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை பார்க்கும் பொழுது, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 56 ரன்கள் எடுத்த போதிலும், 865 புள்ளிகளுடன் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த பட்டியலில், ருதுராஜ் கெய்க்வாட் 7வது இடத்தை தக்க வைத்துள்ளார். இதே போல, ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில், பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் (826), விராட் கோலி (791) மற்றும் ரோஹித் சர்மா (769) புள்ளிகளுடன் 1, 3 மற்றும் 4 வது இடத்தை பிடித்துள்ளனர். டெஸ்ட்டுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், ரோஹித் சர்மா (7 வது), ரிஷப் பண்ட் (12 வது), விராட் கோலி (13 வது) இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மாணவர்களுக்கு அரசு பணியை பெற ஓர் அரிய வாய்ப்பு…, உடனே இதுக்கு APPLY செய்து முந்துங்கள்!!