ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசை – விராட் கோஹ்லி முதலிடம்!!

0
virat first place

ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மன், பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு நாள் சர்வேதச கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மன் தர வரிசை பட்டியலில் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐசிசி வெளியிட்ட புதிய தர வரிசை பட்டியல்கள் 

இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஒரு நாள் போட்டியின் வீரர்களின் புதிய தர வரிசை பட்டியலை வெளியிட்டது. புதிய தர வரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார் அவரை தொடர்ந்து இந்திய அணி துணை கேப்டன் ரோகித் சர்மா 855 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் பாகிஸ்தான் அணி வீரரான பாபர் அசாம் 829 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில உள்ளனர். இங்கிலாந்து அணியின் ஜோனி பேர்ஸ்டோ ஒரு இடம் ஏறி 13 இடத்தில் உள்ளார்.

virat Kholi rohith sharma
virat Kholi rohith sharma

இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான 3வது போட்டியில் சதம் அடித்த்தால் ஒரு இடம் முன்னேறி 22 இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களின் புதிய தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் வீரர் டிரென்ட் பவுல்ட் 722 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும்,

icc rank list
icc rank list

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 719 புள்ளிகள் 2 வது இடத்திலும் உள்ளார்கள். இங்கிலாந்து அணியின் ழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் அயர்லாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி 4 இடங்கள் முன்னேறி 25 வது இடத்திலும், 8 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி 6 இடங்கள் அதிகரித்து 51-வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ஆன முகமது நபி முதலிடத்தில் இருந்து வருகிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 8-வது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here