Friday, March 29, 2024

மகிழ்ச்சி திளைப்பில் நகைப்பிரியர்கள் – அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

Must Read

தொடர்ச்சியாக தங்க விலை நிலவரம் மாறி மாறி ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகின்றது. கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்க விலை இன்று சற்று ஆறுதல் அடையும் வண்ணம் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர் உயர்வு:

கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கின. இதன் காரணமாக பங்குச் சந்தை யாரும் எதிர்பார்க்கா வண்ணம் சரிவினை சந்தித்துள்ளது. முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் என்று அனைவரும் இதனை பார்த்து அச்சம் அடைந்து பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்தனர். இதன் விளைவாக பொது முடக்க காலத்தில் கூட தங்கம் மற்றும் வெள்ளியின் விலை என்றும் இல்லாத அளவு உயர்ந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே தங்க விலை அதிகபட்சமாக உயர்ந்து தான் வந்தது. இப்படியான நிலையில் இந்த வாரம் தங்கம் தொடர்ச்சியாக உயர்வினை சந்தித்து வந்த நிலையில் இன்று தங்க விலை சற்று ஆறுதல் அடையும் வண்ணம் குறைந்துள்ளது. பெருமளவில் தங்க விலை குறையவில்லை என்று சொன்னாலும் சற்று குறைந்துள்ளது மக்கள் மனதில் நிம்மதியினை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 37,680 என்று விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,710 என்று விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 66.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 66,700 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரம் மக்கள் மனதில் ஆறுதலை வரவழைத்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -