Thursday, April 25, 2024

TET தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர வயது தடையில்லை – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!!

Must Read

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் வண்ணம் விரைவில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 8 பேருக்கு மட்டுமே மருத்துவ இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அதிர்ச்சி தகவலை அடுத்து இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரம்:

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி பல எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் தான் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வுகளில் தமிழகத்தை சேர்த்த பல மாணவர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக அரசு வழங்கிய இலவச பயிற்சி மையங்களில் படித்த அரசுப்பள்ளி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் மூலமாக பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. இது இப்படியாக இருக்க அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இந்த ஆண்டே மருத்துவ சேர்க்கைக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை செயல்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அமைச்சர் செய்தி:

ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என்று தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், கட் ஆப் மூலமே சேர்க்கை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே மருத்துவ சீட்டு பெற தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதனால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கண்டிப்பாக 303 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மீண்டும் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “இந்த நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து மக்களும் கூடிய விரைவில் மகிழ்ச்சி அடையும் வண்ணம் நல்ல செய்தியாக அது இருக்கும். அதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் பணிகளில் சேர வயது ஒரு தடை இல்லை” இவ்வாறாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தான் TET தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் அந்த சான்றிதழை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -