மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தரும் அதிர்ச்சி- என்னடா இது கமலுக்கு வந்த சோதனை!!!

0

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த சி.கே.குமரவேல் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சி.கே.குமரவேல் பதவி விலகல்:

தமிழக சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது.  அக்கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவின. இதையடுத்து, கமலின் தவறான நடவடிக்கைகளே தோல்விக்குக் காரணம் என கூறி துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த மகேந்திரன் பதவி விலகினார்.

தற்போது இதை தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளரான சி.கே.குமரவேல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பதிவியில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். கட்சியின் தற்போது நிலவக் கூடிய ஜனநாயகமற்ற சூழ்நிலையில், தனிமனித பிம்பத்தை சார்ந்திருக்கிற அரசியலை விட மதச்சார்பற்ற ஜனநாயக பாதையில் செயல்படவே நான் விரும்புகிறேன் என்று கூறினார்.

கட்சிக்குள் ஜனநாயகம் காணாமல்  போய் சர்வாதிகாரம் தலை தூக்கி விட்டது என்றும் அக்கட்சியில் இருந்து இதற்குமுன் வெளியே போனவர்கள் கூறியிருந்தனர். கட்சியின் தலைவர் மக்கள் நீதி மய்யத்தை நமது கட்சி என்பதை மறந்து, அது என்னுடைய கட்சி என கூற ஆரம்பித்து விட்டார் எனவும்  கட்சி நிர்வாகிகள்  குற்றம் சாட்டினார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here