ஊரடங்கு நீட்டிப்பா ? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை..!

0

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு மற்றும் நோய் பரவல் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். நாளை மறுநாள் 4-வது பொதுமுடக்கம் முடியும் நிலையில் 5-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது பற்றி முதல்வர் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 25-ல் மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் ஆலோசித்த நிலையில் தற்போது ஆட்சியர்களிடம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதலமைச்சர் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ்

மாவட்ட கலெக்டர்களிடம் வீடியோ  கான்பரன்ஸ் முறையில் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனையில் தமிழகத்தில், மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.ஜூன் 1ம் தேதி முதல் பேருந்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.  தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கில் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை மறுதினத்துடன் 31ம் தேதி 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோன பற்றிய ஆலோசனை

செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளிமாநிலங்கள்,நாடுகளிலிருந்து வந்தவர்களால் கொரோனா பரவியது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகம் பரவியதற்கான காரணம் தெருக்கள் குறுகலாக நெரிசல் நிறைந்த பகுதி என்பதால் தான்.அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது. குணமடைவோர் எண்ணிக்கையும் 50 சதவிகிதமாக இருக்கிறது. கொரோனாவைப் பற்றி மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. ஆனால், பாதுகாப்புடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.மேலும் அவர், “மருத்துவர்களின் கடும் முயற்சியின் காரணமாக கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்கு வந்தால் சிகிச்சை பலனளிக்காமல் போய்விடும்” என்று கூறினார். அதே சமயம் கொரோனா தொற்று 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு அறிகுறிகள் இல்லாமலே ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.170 ரயில்கள் மூலம் 2.41 லட்சம் வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதல்வர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here