தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.., முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.., முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.., முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசானது கடந்த வாரம் 42%-திலிருந்து 46%- மாக உயர்த்தி அறிவித்தது. இதனை தொடர்ந்து ஒடிசா மாநில அரசும் தங்களது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை சமீபத்தில் உயர்த்திய நிலையில், தற்போது தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது.

அதாவது, தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து 42% திலிருந்து 46 % மாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். மேலும், இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here