இந்தியாவில் ஒரே நாளில் 5874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.., மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் எகிற தொடங்கியுள்ளது. சமீபகாலமாக மக்கள் கொரோனா பயமின்றி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், இப்பொழுது சில முக்கிய இடங்களில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது கொரோனாவின் நான்காவது அலையாக இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 27.04.2023 அன்று இந்தியாவில் கிட்டத்தட்ட 9,355 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் 28.04.2023 அன்று சுமார் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை அன்று கிட்டத்தட்ட 7,171 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5874 மக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here