கொரோனாவின் நான்காம் அலையில் சிக்கியதா இந்தியா? – அச்சமூட்டும் சுகாதாரத்துறையின் அறிக்கை!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரத்தை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா:

இந்தியாவில் தொடர்ந்து நாளுக்கு நாளாக கொரோனாவின் வேகம் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பரவல் கொரோனாவின் நான்காவது அலையாக இருக்கலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் தங்கள் மக்களை காப்பாற்றுவதற்காக பல நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரத்தை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையின்படி, கடந்த ஒரே நாளில் புதிதாக 18,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் புதிதாக 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,167 ஆகவும் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை 4,39,38,764 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து 20,742 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,32,67,571 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு கொரோனாவின் நான்காம் அலை உருவாகிவிட்டதோ என மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here