இன்ஸ்டாவில் குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலம் – கொஞ்சம் யாருனு பாருங்களே!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சுனிதா. தற்போது அவர் குத்து பாடலுக்கு குத்தாட்டம் போடும் விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி சுனிதா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக பிரபலமானது. அதில் கோமாளிகள் செய்யும் சேட்டை தான் மக்களுக்கு மிகவும் பிடித்து போனது. முதல் சீசனில் புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா கலக்கி வந்தனர். அது படு ஹிட் அடிக்க அடித்த சீசனில் மேலும் சில கோமாளிகளை களமிறங்கியது.

ஆனாலும் புகழ் ஷிவங்கியை மிஞ்ச ஆள் இல்லை. பாதி கோமாளிகள் வெளியேறினர். ஆனால் ஷிவாங்கியை மிஞ்சிய காமெடியில் மக்கள் மனதில் இடம் பிடித்தது சுனிதா தான். தமிழே தெரியாமல் அவர் பேசும் பேச்சு பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

மேலும் அஸ்வினிடம் அவர் சொல்லும் லவ் டயலாக் தான் அல்டிமேட். இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்தவர் தான் சுனிதா. விஜய் டிவியில் பல வருடங்களாக சுனிதா பல நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.

ஆனாலும் அவருக்கான அங்கீகாரம் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் கிடைத்தது. தற்போது அவர் ‘சம்பா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here