Home செய்திகள் கல்வி ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள பாடலுக்கு IAS அதிகாரி சர்ச்சை கருத்து –  NCERT விளக்கம்!!!

ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள பாடலுக்கு IAS அதிகாரி சர்ச்சை கருத்து –  NCERT விளக்கம்!!!

0
ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள பாடலுக்கு IAS அதிகாரி சர்ச்சை கருத்து –  NCERT விளக்கம்!!!

ஐ.ஏ.எஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் மற்றும் பல ட்விட்டர் பயனர்கள் NCERT முதல் வகுப்பு புத்தகத்தில் இடம்பெறும்  ‘ஆம் கி டோக்ரி’  என்ற இந்தி பாடல் குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளதாகவும், அந்த பாடலை உடனடியாக பாடபுத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். NCERT தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT), இது இந்தியாவில் டெல்லியைத தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குழு ஆகும்.இது மத்திய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கும் குழுவாக செயல்பட்டு வருகிறது. தேசிய பாடத்திட்ட கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்துவதும் இக்குழுவின் ஒரு பணியாகும். தற்போது இக்குழுவால் உருவாக்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள ‘ஆம் கி டோக்ரி’ என்ற பாடலில் சிறுமி ஒருத்தி மாம்பழம் விற்பது போன்று எழுதப்பட்டு உள்ளது.

இந்த பாடலுக்கு அவனிஷ் ஷரன் என்ற IAS அதிகாரி ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில், இது போன்ற பாடல்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெற கூடாது, இது குழந்தை தொழிலை ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளது. மேலும் இந்த பாடலில் இலக்கியத்தின் தரமும் மிகக்குறைவாக உள்ளது. எனவே பாடபுத்தகத்திலிருந்து இப்பாடலை நீக்கவேண்டும் என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த இணையவாசிகளும் இவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

இவரின் இந்த குற்றச்சாட்டுக்கு NCERT தற்போது பதில் அளித்துள்ளது. இந்த பாடலின் இறுதியில் உங்களுக்கு அவ்வாறு வேலை செய்யும் குழந்தைகளை பற்றி தெரிந்தால் அவர்களை பள்ளியில் சேர்க்க முயற்சியெடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தை தொழிலாளர்கள் பற்றி ஆசிரியரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும் கூறப்பட்டுள்ளது. எனவே இது குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பாடல் அல்ல என பதில் அளித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here