குக் வித் கோமாளி அஸ்வின் கிட்ட இத நோட் பண்ணிங்களா?ப்பா, எவ்ளோ பெரிய மாற்றம்! ஆடியன்ஸ் ஷாக்!!

0
குக் வித் கோமாளி அஸ்வின் கிட்ட இத நோட் பண்ணிங்களா?ப்பா, எவ்ளோ பெரிய மாற்றம்! ஆடியன்ஸ் ஷாக்!!
குக் வித் கோமாளி அஸ்வின் கிட்ட இத நோட் பண்ணிங்களா?ப்பா, எவ்ளோ பெரிய மாற்றம்! ஆடியன்ஸ் ஷாக்!!

குக் வித் கோமாளி அஸ்வின், தனது செம்பி பட ஆடியோ லாஞ்சில் பேசிய நிகழ்வுகளை வைத்து, நெட்டிசன்கள் ஒரு புது வதந்தியை இணையத்தில் கிளப்பி விட்டுள்ளனர்.

அஸ்வின் பேச்சு :

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர், என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். படத்தின் ஆடியோ லான்ச்சில், என்கிட்ட இருக்க கெட்ட பழக்கம் என்னன்னா? டைரக்டர் சொல்ற கதை புடிக்கலைன்னா தூங்கிடுவேன், இதுவரைக்கும் 40க்கு மேற்பட்ட டைரக்டர்கள் சொன்ன கதையைக் கேட்டு தூங்கி இருக்கிறேன், என சற்று ஆணவமாக பேசினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பலையை கிளப்பியது. குறிப்பாகச் சொல்லப்போனால், அடுத்த படத்தில் இவர் நடிப்பாரா? என்ற அளவுக்கு கூட நெட்டிசன்களின் ட்ரோலுக்கு ஆளானார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின், பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி என்ற படத்தில் நடித்தார். படத்தின் ஆடியோ லாஞ்சில் கமல் இவரை, நேரடியாக பாராட்டியிருந்தார்.

இதை தொடர்ந்து பேசிய அஸ்வின் ஒவ்வொரு வார்த்தையும் மிக கவனமாக பார்த்து பார்த்து, ஒரு வித பதட்டத்துடன் பேசினார். இதை பார்த்த நெட்டிசன்கள், யாருக்குமே அடிபட்டா தான் புத்தி வருது, இந்த மாதிரி முன்னாடியே பேசி இருந்தா? இதெல்லாம் தேவையா? என இவர் குறித்து வதந்தியை கிளப்பி விட்டனர். ஆனால் அஸ்வின் ரசிகர்கள், அவர் சொன்னதை தவறாக சித்தரித்து விட்டு, இப்போ மறுபடியும் அவரை ட்ரோலுக்கு உள்ளாக்குவது நியாயமா? என இவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here