குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி இப்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலரில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டது. முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் கண்ணம்மா ரோஷினி, கிரேஸ், அபிராமி, ராகுல் தாத்தா போன்றோர் எபிசோடையே கலகலப்பாக நகர்த்தி வருகின்றனர்.
ராகுல் தாத்தா மற்றும் பாலாவின் காம்போ தான் இப்பொழுது டாப்பில் உள்ளது. இப்படி இருக்க புகழ் இதில் கலந்து கொள்ளாதது தான் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. ஆனால் அந்த கவலையையும் விஜய் டிவி தீர்த்து வைத்தது. மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார் புகழ்.
இப்படி இருக்க இப்பொழுது ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது குக்குகள் ஒவ்வொருவராக என்ட்ரி கொடுக்க கண்ணம்மா ரோஷினி மற்றும் அபிராமியுடன் செஃப் வெங்கட் பட் ஆட ஆரம்பிக்க அனைவருக்குமே ஷாக்.
வெங்கட் பட்டையே இப்படியே மாத்திடீங்களே டா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும் இப்பொழுது கொஞ்சம் விறுவிறுப்பாகவே போயிக்கொண்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்