Home செய்திகள் கொரோனாவை அடுத்து வரும் ஹாண்டா வைரஸ் – சீனாவில் ஒருவர் பலி.!

கொரோனாவை அடுத்து வரும் ஹாண்டா வைரஸ் – சீனாவில் ஒருவர் பலி.!

0
கொரோனாவை அடுத்து வரும் ஹாண்டா வைரஸ் – சீனாவில் ஒருவர் பலி.!

கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஊரடங்கு நடந்து வருகிறது. தற்போது சீனாவில் கொரோனாவை தொடர்ந்து ஹாண்டா என்ற நோய் பரவி வருகிறது.

ஹாண்டா வைரஸ்

சீனாவில் கொரோனா பாதிப்பால் பலர் உயிர் இழந்தனர். தற்போது அந்த வைரஸ் நாடெங்கிலும் பரவி பரவி வருகிறது. ஆனால் சீனா அந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு விட்டது. இந்த நிலையில் தற்போது சீனாவில் ஹாண்டா என்ற எலி காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதில்ஒரு ஒருவர் பலியாகி உள்ளார்.

யுனான் மாகாணத்தில் இருந்து ஷான்டாங்க் மாகாணத்துக்கு, பஸ்சில் சென்ற ஒருவர், திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு, ஹன்டாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வைரஸ், எலிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவக் கூடியது.

அவருடன் பஸ்சில் பயணம் செய்த, மேலும், 32 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் முடிவுகள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிதாக, ஹன்டா வைரஸ் தோன்றியுள்ளது, சீன மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here