பயனர்கள் வங்கி கணக்கில் ரூ.2000 வரவு – மத்திய அரசு கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ்!!

0
பயனர்கள் வங்கி கணக்கில் ரூ.2000 வரவு - மத்திய அரசு கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ்!!
பயனர்கள் வங்கி கணக்கில் ரூ.2000 வரவு - மத்திய அரசு கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ்!!

மத்திய அரசின் பாரத் கிசான் என்ற திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 11வது தவணையாக கொடுக்கப்பட உள்ள 2000 ரூபாய் பணம், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் செய்தி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அதிரடி:

மத்திய அரசு விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக FTO எனப்படும், Fund Transfer Order கணக்கு உருவாக்கப்பட்டு, விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி, 10வது தவணையாக 2000 ரூபாய் பணம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில், 11வது தவணைப் பணம் இன்னும் வழங்கவில்லை என்பதால், விவசாயிகள் இது குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனையடுத்து, இந்த 11வது தவணை தொகை ஏப்ரல் மாதம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. FTO கணக்கு உருவாக்கப்பட்டு விட்டாலே, விவசாயிகளுக்கான பணம் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், இது குறித்து விவசாயிகள் குழப்பம் அடைய வேண்டாம் என அரசு சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள, விவசாயிகள் பிஎம் கிசான் என்ற வெப்சைட்டை அணுகுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here