இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ.தனது முதல் படமான ராஜா ராணி படத்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.ஆர்யா நடிப்பில் அந்த படம் வெளிவந்தது,பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.கதையில் சில மாற்றங்கள் செய்ய சொல்லில் ஷாருக் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அட்லீயின் அந்தக்கரம்
அட்லீ தனது தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் மூலமாக ஒரு புதிய படத்தினை தயாரித்துள்ளார்.இயக்குனர் அட்லீ பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. தற்போது 3 ஆண்டு இடைவேளைக்கு பின் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அட்லீ வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘அந்தகாரம்’என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரிக்கிறார்.
அந்தக்கரம் பட குழுவினர்
![](https://enewz.in/wp-content/uploads/2020/04/arj_main-1024x1024.jpg)
அவர் தயாரிக்கும் இரண்டாவது படமாக ‘அந்தகாரம்’ படம் அமைந்துள்ளது. விக்னராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோவாக கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |