Home செய்திகள் போகிப் பண்டிகையை இப்படிதான் கொண்டாட வேண்டும்.., மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!!!

போகிப் பண்டிகையை இப்படிதான் கொண்டாட வேண்டும்.., மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!!!

0
போகிப் பண்டிகையை இப்படிதான் கொண்டாட வேண்டும்.., மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!!!
தமிழர் திருநாளான தைப்பொங்கல் வரும் ஜனவரி 15ஆம் தேதி தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இன்றைய நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பது வழக்கம். இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் போகி பண்டிகையை எப்படி கொண்டாட வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளனர்.
அதாவது போகிப் பண்டிகை அன்று பிளாஸ்டிக், ரப்பர், டயர், டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரித்தால் அதிக அளவில் புகை வெளியேறும். இதனால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடும். எனவே பொதுமக்கள் அன்றைய நாளில் இது போன்ற பொருட்களை எரிக்காமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here