தனியார் பள்ளிகளில் கட்டாய கட்டண வசூல்…, அரசு மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கை??

0
தனியார் பள்ளிகளில் கட்டாய கட்டண வசூல்..., அரசு மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கை??
தனியார் பள்ளிகளில் கட்டாய கட்டண வசூல்..., அரசு மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கை??
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும், மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிமுகப்படுத்துவதுடன் அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. இந்த வகையில் ஆந்திரப் பிரதேச அரசானது, ஜகன்னா வித்யா தீவேனா என்ற திட்டத்தை கடந்த 2020ஆம் ஆண்டில் கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் கீழ், ஏழை பொருளாதார பின்னணியில் உள்ள மாணவர்களின் தாய்மார்களின் வங்கி கணக்கிற்கு கல்வி, சிறப்பு மற்றும் தேர்வு உள்ளடக்கிய முழு கட்டணத்தையும் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, செலுத்துவதற்கான காலகெடு வரும் நவம்பர் 24 ஆம் தேதி வரை என அறிவித்துள்ள நிலையில், சில தனியார் கல்வி நிறுவனங்கள் வரும் நவம்பர் 20 ஆம் தேதிக்குள் கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருவதாக ஆந்திரப் பிரதேச பெற்றோர் சங்கம் (PAAP) அரசிடம் கவலை தெரிவித்துள்ளது. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here