![அட்ரா சக்க.., தளபதி லியோ படத்துடன் போட்டி போடும் அஜித்.. டபுள் ட்ரீட் கொடுக்க போகும் படக்குழு!!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! அட்ரா சக்க.., தளபதி லியோ படத்துடன் போட்டி போடும் அஜித்.. டபுள் ட்ரீட் கொடுக்க போகும் படக்குழு!!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/ff-2023-10-13T112908.621-768x576.jpg)
கோலிவுட்டில் அடுத்த சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் லியோ. இப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது படத்தோட டிக்கெட் விற்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக இப்படம் ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக அஜித் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில், அவரின் அடுத்த படத்தை விஷாலை வைத்து மார்க் ஆண்டனி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதோடு இணைந்து விடாமுயற்சி அப்டேட்டும் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. லியோ படத்துக்கு போட்டியாக இந்த அப்டேட் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் எதிர்நீச்சல் சீரியல்.., டார்கெட் அந்த நபர் தான்!!