சர்வதேச கேங்ஸ்டராக அஜித்., துணிவு கொண்டு ஜெயித்தாரா? இல்லையா? முழு விமர்சனம் இதோ!!

0
சர்வதேச கேங்ஸ்டராக அஜித்., துணிவு கொண்டு ஜெயித்தாரா? இல்லையா? முழு விமர்சனம் இதோ!!
சர்வதேச கேங்ஸ்டராக அஜித்., துணிவு கொண்டு ஜெயித்தாரா? இல்லையா? முழு விமர்சனம் இதோ!!

அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் ஏக போக கமெண்ட்களை பெற்று வருகிறது.

துணிவு விமர்சனம் :

நடிகர் அஜித், இயக்குனர் ஹெச். வினோத்துடன் 3வது முறையாக கூட்டணி அமைத்து, துணிவு படத்தில் நடித்திருந்தார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய 2 படங்களில் அஜித் ரசிகர்களை ஏமாற்றிய வினோத், இந்த படத்தில் மொத்தமாக ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்து விட்டார். சென்னையில் உள்ள யுவர்ஸ் பேங்க் என்ற வங்கியில் இருந்து 500 கோடி ரூபாயை கொள்ளை கும்பல் ஒன்று, அபகரிக்க திட்டமிடுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவர்களின் திட்டத்தில் மாநகர உதவி கமிஷனரும் கூட்டு சேர்கிறார். இதை தெரிந்து கொண்ட சர்வதேச கேங்ஸ்டரான அஜித், அவர்களுடன் போராடி அந்த கொள்ளை திட்டத்தை முறியடிக்கிறார். கடைசியாக அந்த கொள்ளை கும்பலை, மக்களுக்கு எப்படி வெளிச்சம் போட்டு காட்டினார் என்பதே படத்தின் மீதி கதை. படம் முழுக்க ஒன் மேன் ஆர்மியாக அஜித் வலம் வருகிறார். இதையெல்லாம் தாண்டி, பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள். எந்த விஷயத்தில் எல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதை, நாசுக்காக காட்டியிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸை விட்டு போனாலும் போனாங்க ஒரே கிளாமர் தான்., இது உங்களுக்கே ஓவரா தெரியலையா காவ்யா!

இது போன்ற ஆக்ஷன் நிறைந்த படங்களில், ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் தர முடியுமா? என்ற கேள்விக்கு மஞ்சு வாரியர் நடிப்பு பதிலாக அமைந்துள்ளது. நேர்மையான போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி படத்தில் அடிக்கடி ஸ்கோர் செய்கிறார். சண்டை காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர், பின்னணி இசையில் நொறுக்கி எடுத்த ஜிப்ரான் என எல்லாருமே படத்தில் ஒரு ரவுண்டு வருகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி, படத்தில் எவ்வளவு துப்பாக்கிகள் சுட்டாலும், குண்டு வெடித்தாலும் ஹீரோக்கு மட்டும் ஒன்று ஆவதில்லை என்ற, ஒரு சில லாஜிக் இல்லாத காட்சிகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால் வாடிக்கையாளர்கள், வங்கிகளை முழுவதுமாக நம்பி பேராசை படக்கூடாது என்பதை அஜித் சோசியல் மெசேஜாக இந்த படத்தில் சொல்லியுள்ளார். இரண்டு மணி நேரம் 26 நிமிடம் ஒளிபரப்பாகும் இந்த படம், 5க்கு 3.25 ரேட்டிங்கை பெற்று அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here