![Flop ஆன போலோ சங்கர் - தயாரிப்பாளருக்கு சிரஞ்சீவி செய்த அந்த செயல்.., அந்த மனசு இருக்கே.., அதா கடவுள்!! Flop ஆன போலோ சங்கர் - தயாரிப்பாளருக்கு சிரஞ்சீவி செய்த அந்த செயல்.., அந்த மனசு இருக்கே.., அதா கடவுள்!!](https://enewz.in/wp-content/uploads/2023/08/ff-93-696x522.jpg)
தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த வேதாளம் படத்தின் ரீமேக்கில் உருவான திரைப்படம் தான் போலோ சங்கர். இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி அஜித் கேரக்டரில் நடித்து இருந்தார். அவரின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். ஆனால் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வி மண்ணை கவ்வியது, இதனால் தயாரிப்பாளர் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதை ஈடுகட்டும் விதமாக சிரஞ்சீவி ஒரு காரியத்தை செய்துள்ளார். அதாவது போலா ஷங்கர் படத்துக்காக சிரஞ்சீவிக்கு சம்பளம் ரூ. 60 கோடி என பேசப்பட்டது. அதை படப்பிடிப்பின் போதே கிட்டத்தட்ட ரூ.50 கோடியை சிரஞ்சீவிக்கு தயாரிப்பாளர் கொடுத்து விட்டாராம். மீதியுள்ள ரூ.10 கோடிக்கு காசோலை கொடுத்து இருந்தார். ஆனால் படம் பிளாப் ஆனதால் அந்த 10 கோடியை தயாரிப்பாளரிடமே கொடுத்து விட்டாராம்.