நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் AK 62 படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஏகே 62:
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 பற்றி தான். இதற்கு முன்னர் இப்படத்தை லைக்கா நிறுவனம் விக்னேஷ் சிவனிடம் கொடுத்தது. அடுத்து கொஞ்சம் மாதங்களில் விக்கி கதையை நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை என்று அவரிடம் இருந்து ஏகே 62 படத்தை புடுங்கியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதை உறுதிப்படுத்தும் விதமாக விக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் போட்டோவை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஏகே 62 வை மகிழ் திருமேனியிடம் படக்குழுவினர் கொடுக்க போவதாக செய்திகள் பரவின. தற்போது அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவிடம் ஏகே 62 வை குறித்து அஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் AK 62 படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் குமார் நடிக்க இருக்கும் AK 62 படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.