தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் நடிகர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். இவர் ரசிகர்களால் தல என அழைக்கப்படுகிறார். மே 1 அன்று இவர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த முறை கொரோனா ஊரடங்கால் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டு உள்ளதால் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் அஜித் பிறந்தநாள் ஹேஷ்டேக் உலகளவில் 1 மில்லியனிற்கும் அதிகமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்களும் போட்டிபோட்டு விஜய் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தல பர்த்டே ஸ்பெஷல்:
நடிகர் அஜித் இன்று (மே 1) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அஜித் 1971ம் ஆண்டு ஹைராபாத்தில் பிறந்து இருந்தாலும் வளர்ந்தது சென்னையில் தான். தனது பள்ளிப்படிப்பை பெற்றோர்கள் அனுமதியையும் மீறி 1986ல் நிறுத்திக் கொண்டார் அஜித்குமார். தனக்கு விருப்பமான பைக் மெக்கானிக் வேலையை தொடர்ந்தார். அதில் ஆர்வம் அதிகரித்ததால் பைக், கார் ஓட்டக் கற்றுக்கொண்டு பந்தயங்களில் கலந்து கொண்டார். அதன் பின்னர் சிறு சிறு விளம்பரங்களில் நடித்த அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
ஆரம்ப காலத்தில் ஆசை, வரலாறு, சிட்டிசன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இவர் சிறந்த நடிகர், பிலிம் பேர் விருதுகளும் பெற்றுள்ளார். இன்று அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
ட்விட்டர் போர்:
அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் சண்டையிடுவது வழக்கம் தான் என்றாலும், இன்று அது வேற லெவலுக்கு சென்று விட்டது. அஜித் பிறந்தநாளிற்கு ரசிகர்கள் #HBDDearestThalaAJITH #AjithKumar ட்ரெண்ட் செய்ய, விஜய் ரசிகர்களும் போட்டிக்கு #VijayTheFaceOfKollywood #Master ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்று ட்விட்டர் முழுவதும் இவர்களின் ஹேஷ்டேக் தான் டாப் லிஸ்டில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |