விஜய் கட்சி பெயருக்கு வந்த புதிய சிக்கல்., தேர்தல் ஆணையத்தில் புகார்., வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

0

தமிழ் சினிமாவில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நலத்திட்டங்களை செய்து வந்த இவர் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, அரசியலில் கால் பதித்துள்ளார். அதன்படி இந்த கட்சியை TVK என சுருக்கமாக கூறப்படுகிறது.

ஆனால் விஜய்யின் கட்சியை ஆங்கிலத்தில் சுருக்கமாக TVK என அழைக்க கூடாது என புகார் எழுந்துள்ளது. அதாவது 2012 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தேர்தலில் போட்டியிட்டுள்ளது. மேலும் இந்த கட்சியை சுருக்கமாக TVK என்று தான் அழைக்கப்படுகிறது. இதனால் விஜய் தொடங்கியிருக்கும் கட்சியை TVK என அழைக்கும் உரிமையை வழங்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here