தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை – பெரும் துயரத்தில் மக்கள்!!!

0

பெட்ரோல், டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது. அதன் படி சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.97.43,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.64 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெரும் துயரத்தில் மக்கள்:

நம்முடைய அத்தியாவசியமான ஒன்றாக எரிபொருட்கள் இருக்கின்றன. அவற்றில் வாகனப் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசல் மிகவும் முக்கியமானது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து ரூ.97.43ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.91.64 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் இன்று (சனிக்கிழமை) மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்துள்ளன. இந்திய சந்தையில், பெட்ரோல் வீதம் லிட்டருக்கு 27 பைசாவும், டீசல் லிட்டருக்கு 23 பைசாவும் விலை உயர்ந்தது. எண்ணெய் விலை மாற்றங்களுக்குப் பிறகு, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.12, டீசல் ரூ .86.98 ஐ எட்டியுள்ளது.

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் வேளையில் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here