ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருந்த நெல்சனின் ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியானது. சூப்பர் ஸ்டார் நடித்த இந்த படத்தில் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப், ரம்யா கிருஷ்ணன் மற்றும் வசந்த் ரவி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். ஓப்பனிங் ஷோவில் இருந்து இப்பொழுது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் ரூ. 90 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான துணிவு மற்றும் வாரிசு படத்தின் முதல் நாள் வசூலை அடித்து தூக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.