Saturday, June 29, 2024

சச்சினுக்கு தவறான தீர்ப்பு அளித்து வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் – சொல்கிறார் முன்னாள் நடுவர் ஸ்டீவ் பக்னர்..!

Must Read

2009ஆம் ஆண்டு தனது நடுவர் பணியில் இருந்து விலகிய ஸ்டீவ் பக்னர் தான் 2 முறை கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு தவறான தீர்ப்பு வழங்கி உள்ளதாக தற்போது தெரிவித்து உள்ளார்.

ஸ்டீவ் பக்னர்:

கிரிக்கெட் தொடர்களில் தலை சிறந்த நடுவர்களின் ஒருவர் ஸ்டீவ். இவர் 128 டெஸ்ட் மற்றும் 181 ஒரு நாள் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார். இதில் 5 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டதும் அடங்கும்.

steve buckner
steve buckner

2009-ம் ஆண்டு நடுவர் பணியில் இருந்து ஒதுங்கி கொண்டார். ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு தான் சச்சினிக்கு 2 முறை தவறான தீர்ப்பை வழங்கி உள்ளதாக கூறியுள்ளார்.

“தவறு செய்வதுமனித இயல்பு தானே”:

ஸ்டீவ் கூறியதாவது “2003-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கில்லெஸ்பியின் பந்து வீச்சில் தெண்டுல்கருக்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தேன். பிறகு பந்து ஸ்டம்புக்கு மேலாக செல்வதும், நான் தவறிழைத்ததும் உணர்ந்தேன். இதே போல் 2005-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அப்துல் ரசாக் வீசிய பந்தில் தெண்டுல்கர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக விரலை உயர்த்தினேன். ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது. ஈடன்கார்டனில் அதுவும் இந்தியா பேட்டிங் செய்யும் போது ரசிகர்களின் கரவொலியில் எதுவும் சரியாக கேட்காது”

steve-sachin
steve-sachin

மேலும் அவர் கூறியதாவது ” நானும் மனிதன் தான். வேண்டும் என்று தவறு செய்வதில்லை. நான் தவறாக தீர்ப்பு கூறினால் அன்று முழுவதும் தூக்கம் வராது. தற்போது இந்த பிரச்சனைகள் இல்லை. ஆனால் இன்று அப்படி இல்லை. பல சாதனங்கள் வந்து விட்டது. அதனால் தவறாக கணிக்க வாய்ப்புகள் குறைவு. துல்லியமான தீர்ப்புகளை வழங்குவதில் அது உதவிகரமாக இருப்பதை அறிவேன்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -