![KGF 2 பட லிஸ்ட்ல இதுவும் இருக்கும்.,2023ல் தரமான சம்பவம் ரெடி! தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!! KGF 2 பட லிஸ்ட்ல இதுவும் இருக்கும்.,2023ல் தரமான சம்பவம் ரெடி! தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!!](https://enewz.in/wp-content/uploads/2022/12/ff-6-18-768x576.jpg)
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்த வருடம் வெளியாக இருக்கும் படங்களை குறித்து பேசியுள்ளார்.
விஜய் கிர்கந்தூர்:
தென்னிந்திய தமிழ் சினிமாவை திருப்பி போட்ட படம் என்றால் அது பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் பாகம் 2 தான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, வசூலை வாரி குவித்து சாதனை படைத்தது. ராக்கிங் ஸ்டார் யாஷ் ஹீரோவாக நடித்த இப்படத்தை விஜய் கிர்கந்தூர் என்பவர் தயாரித்தார். மேலும் இப்படத்தின் மூன்றாவது பாகத்தின் பணிகள் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தற்போது பிரசாந்த் நீல் பாகுபலி பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தையும் விஜய் கிர்கந்தூர் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்நிலையில் விஜய் கிர்கந்தூர் நிறுவனம் சமீபத்தில் நடந்த பேட்டியில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, எங்களுக்கு அதிக படம் தயாரிக்கணும் என்ற நோக்கம் இல்லை, ஒரு ஆண்டில் தரமான சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தால் போதும்.
எழில் கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய கோபி.., அப்போ விரைவில் டும் டும் தான்!!
அந்த வகையில் சலார் படம் அமோக வெற்றி படமாக அமையும். இந்த வருடம் என் தயாரிப்பில் வெளிவந்த கேஜிஎப், காந்தார படங்கள் போன்று, 2023 ல் சாதனை படைக்க பல படங்கள் வருகிறது. அதன்படி பகத் பாசில் நடித்த தூம் மாம், தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா போன்ற படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது என்று கூறினார்.