தமிழக ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு., அரசு வெளியீட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
தமிழக ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு., அரசு வெளியீட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழக ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு., அரசு வெளியீட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் மாதந்தோறும் பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலை கடைகளில் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், உலர் திராட்சை, முந்திரி மற்றும் கரும்புடன் சேர்த்து 21 பொருட்கள் அட்டை தாரர்களுக்கு ரேசன்கடைகளில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை மற்றும் ரூ 1000 ரொக்கப்பணமாக வழங்கப்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ரயில் பயணிகளுக்கு ஷாக்., சொந்த ஊர் போக பிளான் போட்டிருந்தீங்களா? முக்கிய ரயில்கள் ரத்து!!

இதனை தொடர்ந்து ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 200 லிருந்து 250 அட்டைதாரர்களுக்கு ரேசன்கடைகளில் பொங்கல்பரிசு வழங்கப்படும். இந்நிலையில் ஜனவரி 13 ஆம் தேதியும் நியாயவிலைக்கடைகள் இயங்கும் என்றும் பொதுமக்கள் பொங்கலுக்கு முந்தய நாளும் பொங்கல் பரிசை ரேசன்கடைகளில் வாங்கிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here