
தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. எனவே எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த அறிக்கையில் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் ஈரோடு மஞ்சள் சந்தை நவம்பர் 10ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் நவம்பர் 15ஆம் தேதி வழக்கம் போல் ஈரோடு மஞ்சள் சந்தை செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.