இன்று உலக சைக்கிள் தினம் – சைக்ளிங்கில் இவ்வளவு நன்மைகளா..!

0

பெட்ரோல், டீசல் என எந்த எரிபொருளும் இல்லாமல் நமது உடல் சக்தியை மட்டும் பயன்படுத்தி இயக்கக்கூடிய வாகனம் ‘சைக்கிள்’. உலக சைக்கிள் தினமான இன்று அதனை ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து வச்சுக்குவோம்.

சைக்கிள் தினம்:

மோட்டார்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்திற்கு முன்பு பயணத்திற்காக பயன்படுத்தப்பட்ட மிதிவண்டியில் (சைக்கிள்) தற்போது மோட்டார் வைக்கப்பட்டு அதை ஓட்டுவதும் எளிய முறையாக மாற்றப்பட்டு உள்ளது. தற்போது பயணத்தை விட உடற்பயிற்சிக்காகவே அதிகளவில் சைக்கிள் ஒட்டப்படுகிறது. நம் உடல் ஆரோக்கியத்தை காக்க மன அழுத்தத்தைப் போக்க , உங்களை சுறுசுறுப்பாக்க என அனைத்து வித நன்மைகளையும் இந்த ஒரே ஒரு சைக்ளிங் மூலம் தான் பெற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பணியிடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவர்களுக்கு உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் என பல உடல் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கெல்லாம் சைக்ளிங் பெரிய தீர்வாக இருக்கும். அதுவும் பணியிடத்தில் அதிக உற்பத்தித் திறனைக் காட்டவேண்டுமெனில் சைக்ளிங்தான் சிறந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து, நமது எனர்ஜியை கூட்டுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் போன்ற எதுவும் நம்மை அண்டாது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here