வேடிக்கை பார்த்தது ஒரு குத்தம்மா – கல்யாண வீட்டில் கிணற்றில் விழுந்து ஒரே சமயத்தில் 13 பெண்கள் பலி!!

0
வேடிக்கை பார்த்தது ஒரு குத்தம்மா - கல்யாண வீட்டில் கிணற்றில் விழுந்து ஒரே சமயத்தில் 13 பெண்கள் பலி!!
ரூ. 4000 கடனுக்கு ரூ. 16,000 லோன்.. கல்லூரி மாணவர் தற்கொலை -  ஆந்திராவில் நேர்ந்த சோகம்!!

உத்தரபிரதேசத்தில், நவுராங்கியா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் கிணற்றில் தவறி விழுந்ததில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

13 பெண்கள் பலி:

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, நெபுவா நவுராங்கியா பகுதியில் உள்ள குஷி நகரில் நடைபெற்றுக்கொண்டிருந்த திருமணத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது இந்த திருமண நிகழ்வுகளின் போது, அங்கு ஒரு கிணற்றின் ஸ்லாப் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்த சில பெண்கள், கிணற்றில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தில் 13 பெண்கள் உயிரிழந்ததாகவும், இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு, 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here