![உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கப்பதக்கங்களை அள்ளி குவிக்கும் இந்திய வீரர்கள்..., சாதனைகளை படைத்து அசத்தல்!! உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கப்பதக்கங்களை அள்ளி குவிக்கும் இந்திய வீரர்கள்..., சாதனைகளை படைத்து அசத்தல்!!](https://enewz.in/wp-content/uploads/2023/08/fff-mp-696x365.jpg)
ஜோர்டான் தலைநகர் அம்மனில் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப் தொடரில், நேற்று 61 கிலோ ஃபிரீ ஸ்டைல் எடை பிரிவில் இந்தியாவின் மோஹித் குமார் ரஷ்யாவின் எல்டரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். தற்போது, இவரை தொடர்ந்து பெண்களுக்கான 76 கிலோ ஃப்ரீஸ்டைல் எடை பிரிவில் இந்தியாவின் பிரியா மாலிக் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இன்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் லாரா செலின் குஹனை எதிர்கொண்டார். இதில், ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய இந்தியாவின் பிரியா மாலிக் 5-0 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம், U20 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்தியாவின் இரண்டாவது மல்யுத்த வீராங்கனையனார். இதற்கு முன், கடந்த ஆண்டு நடைபெற்ற மல்யுத்தத்தில் உலக சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் ஆண்டிம் பங்கால் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய் எங்க வர., இனி உன்னோட ஆட்டம் close.., பாக்கியலட்சுமி சீரியலையே தூக்கி சாப்பிட்ட சிறகடிக்க ஆசை!!!