தமிழக மது பிரியர்களே., டாஸ்மாக் கடை ஊழியர்களும் போராட்டம்? அதிர்ச்சியான அறிவிப்பு!!!

0
தமிழக மது பிரியர்களே., டாஸ்மாக் கடை ஊழியர்களும் போராட்டம்? அதிர்ச்சியான அறிவிப்பு!!!
தமிழக மது பிரியர்களே., டாஸ்மாக் கடை ஊழியர்களும் போராட்டம்? அதிர்ச்சியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்து பயணிகள் பலரும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள், சட்டசபை கூட்டத் தொடரின் போது காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக டாஸ்மாக் சங்க தலைவர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது தொடர்பாக அவர் கூறுகையில், “டாஸ்மாக் மதுக்கடைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக 25,000 ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பணி நிரந்தர சட்டப்படி 480 நாட்கள் பணிபுரிந்த ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் இதுவரை டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற சட்டசபை கூட்டத் தொடரின் போது, சென்னையில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.” என கூறியுள்ளார்.

மீனவர்கள் இந்த நாளில் கடலுக்கு செல்ல வேண்டாம்.., மீன்வளத்துறை விடுத்த எச்சரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here