5 மாவட்ட பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை ரத்து., முதல்வர் வருகையால் மாற்றப்பட்ட வேலை நாள்!!

0
5 மாவட்ட பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை ரத்து., முதல்வர் வருகையால் மாற்றப்பட்ட வேலை நாள்!!
5 மாவட்ட பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை ரத்து., முதல்வர் வருகையால் மாற்றப்பட்ட வேலை நாள்!!

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் வருகிற மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை நாள் மாற்றம் :

தமிழகத்தில் தற்போது ஆண்டு இறுதி பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஏப்ரல் இறுதி வாரத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு, அதன் பிறகு கோடைகால விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், வருகிற மார்ச் 4ஆம் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்த உள்ளார். இதனால் அன்றைய தினம் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வழக்கம்போல், திங்கட்கிழமை பாட அட்டவணையின் படி பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு செக்., எங்க Permission இல்லாம எதையும் செய்யக்கூடாது! அரசு திட்டவட்டம்!!

இதற்கு பதிலாக வருகிற மார்ச் 13 ஆம் தேதி திங்கட்கிழமை, விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் தென் மாவட்ட வருகையையொட்டி, இது சார்ந்த அனைத்து பணிகளும் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here