Home செய்திகள் தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுத்த CPS இயக்கம்!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுத்த CPS இயக்கம்!!!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுத்த CPS இயக்கம்!!!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் நீண்டகாலமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேற்று முன்தினம் (ஜன. 10) S.ஜெய ராஜேஸ்வரன் தலைமையில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 

அதில் இம்மாத இறுதியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தற்செயல் விடுப்பு போராட்டத்தை நடத்தி, விரிவான பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதேபோல் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்ல முற்றுகை போராட்டத்தை பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 16ஆம் தேதியன்று நடத்தவும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ஒழிக்கும் வரை போராடுவோம் என உறுதியுடன் போராடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here