சலூன்களில் ஆதார் கட்டாயம் – தமிழக அரசு புதிய உத்தரவு..!

0

நாடெங்கிலும் தற்போது கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது பல தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன. அதற்கு அரசு சில நிபந்தனைகளை விதித்திருந்தது.

ஊரடங்கு தளர்வு

மத்திய அரசால் 5 ஆம் கட்ட ஊரடங்கு கடந்த மே 31 அறிவிக்கப்பட்டது. அதில் பல தளர்வுகளை மத்திய அறிவித்தது. மேலும் சென்னையில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Lockdown in India: Officially or unofficially, India in lockdown ...

எனவே கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டார். அதில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் போன்றவை சில நிபந்தனைகளுடன் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. என கூறினார்.

நிபந்தனைகள்

அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்களின் நுழை வாயிலில், சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைககளை சுத்தம் செய்வதற்கான சுத்திகரிப்பானை நுழை வாயிலில் வைக்க வேண்டும்.

சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறித்து கொள்ள வேண்டும்.

All You Need to Know about Property Registration – RoofandFloor Blog

வாடிக்கையாளர்கள் மற்றும் அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் பணியாளர்கள் தங்களது கைகளை துடைப்பதற்காக பேப்பர் நாப்கின் வைக்கப்படுவதோடு, அவைகள் பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

Where to buy sold out household essentials: Toilet paper, hand ...

அழகு நிலையம், ஸ்பாக்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும், அழகு நிலையம், ஸ்பாக்களில் நுழைவதற்கு முன்பும், வாடிக்கையாளருக்கு அழகூட்டும் பணியினை சேவையினை துவங்கும் முன்னரும், சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்திகரிப்பானைக் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இத்தகைய சுய தூய்மை நடைமுறைகளை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அழகூட்டும் பணியினை/ சேவையினை துவங்கும் முன்பும் செய்ய வேண்டும்.

Autos run, salons & beauty parlours reopen in Chennai - News Today ...

அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளரும், பணியாளர்களும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும்.

அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர், பணியாளர்கள் அடிக்கடி தங்களது மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

அழகு நிலையம், ஸ்பாக்களில் பணிபுரியும் பணியாளருக்கு இருமல், சளி அல்லது காயச்சல் இருப்பின், அவர்கள் அரசு மருத்துவரை அணுகி, பரிசோதனை மேற்கொண்டு மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பணியில் ஈடுபடக் கூடாது. மேலும், இதனை ஒவ்வொரு அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் உரிமையாளர் கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும்.

Why Do We Sneeze? | Ochsner Health

காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் இருக்கும் போது அழகு மற்றும் பிற சேவைகளுக்கு அழகு நிலையம், ஸ்பாக்களுக்கு வாடிக்கையாளர்கள் வரக்கூடாது. அத்தகயை வாடிக்கையாளர்களை அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற விபரத்தை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு ஒவ்வொரு அழக நிலையம், ஸ்பாக்களிலும் மேற்கசொன்ன அறிவிப்புடன் கூடிய காட்சிப் பலகை வைக்கப்பட வேண்டும்.

Salon in Georgia tests limits of social distancing as state ...

சமூக விலகலை பின்பற்றும் வகையில், அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் ஒரே, நேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதை தவிரிக்கும் பொருட்டு இயன்றவரை முன் பதிவு அடிப்படையில் மற்றும் இதர சேவைகள் வழங்க வேண்டும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here