தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருளை ஒழிக்க புதிய நடவடிக்கை? முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலில் ஆலோசனை கூட்டம்!!!

0
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருளை ஒழிக்க புதிய நடவடிக்கை

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களால் பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல குடும்பங்கள் சீரழிவதோடு பல்வேறு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனைக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ஊழியர்களுக்கான ஊதிய சதவீதம் அதிரடி உயர்வு…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here