73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த UAE…, முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!!

0
73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த UAE..., முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!!

டி20 உலக கோப்பையின் தகுதி சுற்றில் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

டி20 உலக கோப்பை:

டி20 உலக கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் குரூப் A யில் இடம் பெற்றுள்ள இலங்கை அணி, ஐக்கிய அரபு அமீரக (UAE) அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற UAE அணியின் கேப்டன் சிபி ரிஸ்வான் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணியில், குஷால் மெண்டிஸ் 18, தனஞ்சய டி சில்வா 33 ரன்களில் வெளியேறினர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

UAE யின் கார்த்திக் மெய்யப்பனின் அசத்தலான பந்து வீச்சால் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்திருந்தது. இதில், இலங்கையின் பாத்தும் நிஸ்ஸங்க மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதத்தை கடந்து 74 ரன்களை கடந்திருந்தார். UAE சார்பாக, கார்த்திக் மெய்யப்பன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் படைத்திருந்தார்.

பாக் வீரருக்கு இணையாக விராட் செய்த விஷயம்.., சக அணிகளுக்கு சிக்கல் ஏற்படுமா?? வைரலாகும் வீடியோ!!

இதனை தொடர்ந்து, 153 என்ற இலக்கை துரத்திய UAE 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பந்து வீச்சில் அசத்திய இலங்கையின் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்கா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனால், இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் UAE யை வீழ்த்தி உலக கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. குரூப் A யில் UAE யை தவிர இலங்கை, நெதர்லாந்து, நமீபியா அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here