ஜெயாவை தொடர்ந்து படமாகும் கலைஞரின் வாழ்க்கை படம்., இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா அசந்து போவீங்க!!

0
ஜெயாவை தொடர்ந்து படமாகும் கலைஞரின் வாழ்க்கை படம்., இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா அசந்து போவீங்க!!
ஜெயாவை தொடர்ந்து படமாகும் கலைஞரின் வாழ்க்கை படம்., இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா அசந்து போவீங்க!!

உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மறைந்த கலைஞர் பயோபிக்கை படமாக எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலைஞர் – ஸ்டாலின்:

தற்போதைய காலகட்டத்தில் சாதனை புரிந்த மனிதர்களின் பயோபிக் கதையை படமாக எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தோனி அன்டோல்டு ஸ்டோரி, தலைவி, சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் போன்ற படங்கள் வெளியே வந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மறைந்த கலைஞர் பயோபிக் படத்தை உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் எடுக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது மறைந்த முதல்வர் கலைஞர் செய்த சாதனைகளையும் அவர் அரசியலில் தாண்டி வந்த பாதையை மையமாக கொண்டு எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கமலுடன் மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி.., இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ஆண்டவரே!!

அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் ஸ்டாலினின் பயோபிக் படத்தை தனியாக எடுக்க உள்ளதாக செய்தி வெளியாகியது. அதில் சமுத்திரக்கனி ஸ்டாலின் வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here