உனக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா.., நீயெல்லாம் குடும்பமா நடத்துற.., ஐஸ்வர்யாவை விளாசிய தனம்!!!!

0
உனக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா.., நீயெல்லாம் குடும்பமா நடத்துற.., ஐஸ்வர்யாவை விளாசிய தனம்!!!!
உனக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா.., நீயெல்லாம் குடும்பமா நடத்துற.., ஐஸ்வர்யாவை விளாசிய தனம்!!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் கஸ்தூரி மூலம் கண்ணன் வட்டிக்கு பணம் வாங்கிய விஷயம் தனத்திற்கு தெரிய வருகிறது. இதனால் தனம் கண்ணன், ஐஸ்வர்யாவை கண்டபடி திட்டுகிறார். மேலும் ஐஸ்வர்யாவிடம் உனக்கு எதுக்கு இவ்வளவு ஆடம்பரம். இதெல்லாம் தேவையா என சத்தம் போடுகிறார். அந்த நேரத்தில் முல்லை இந்த விஷயத்தை மூர்த்தி மாமாவிடம் சொல்லிறலாம் என்று சொல்ல தனம் அதெல்லாம் வேண்டாம் என்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது கஸ்தூரியும் மூர்த்தி அண்ணனிடம் சொல்லிறலாம் என்று சொல்ல தனம் வேண்டாம், பணத்துக்கு நானே பொறுப்பேத்துக்குறேன் என்கிறார். அடுத்ததாக கண்ணன் தனத்திடம் நா செஞ்சது தப்பு தான் என மன்னிப்பு கேட்கிறார். பின் தனம் இனியாச்சு ஒழுங்கா இரு என்று அட்வைஸ் செய்கிறார். இந்த பக்கம் ஜனார்த்தனன், ஜீவா, மீனா எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனார்த்தனன் புது வீடு வாங்கப் போவதாக சொல்ல மீனாவின் அம்மா இப்போ எதுக்கு வீடு என்று கேட்க மாப்பிள்ளைக்கு தான் என்கிறார்.

ஐயோ.., கண்ணை பறிக்கும் அழகில் சுண்டியிழுக்கும் அனிகா.., ஏங்கி தவிக்கும் இளவட்டங்கள்!!!

உடனே மீனா எங்களுக்கு வீடு வேண்டாம். நாங்க புது வீடு கட்டவும் அங்கையே போயிடுவோம் என்று சொல்ல ஜனார்த்தனன் சத்தம் போடுகிறார். பின் கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் முல்லை வருகிறார். அப்போது கண்ணன் வழக்கம் போல் முல்லையை வம்பிழுக்கிறார். பின் முல்லை கண்ணனிடம் உன்னோட சம்பளத்த நீ EMI வேற கட்டணும். அப்பறம் எப்படி கஸ்தூரிக்கு நீங்க பணத்தை கொடுத்தீங்க என்று கேட்க கண்ணன் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். மேலும் உண்மையை சொல்ல முடியாமல் கண்ணன், ஐஷு பொய் சொல்ல முல்லை அவர்களை எச்சரிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here