அரசு ஊழியர்களுக்கு No Salaray., கார், வீடு வாங்க திடீர் தடை! பிரதமரின் அறிவிப்பால் குழப்பம்!!

0
அரசு ஊழியர்களுக்கு No Salaray., கார், வீடு வாங்க திடீர் தடை! பிரதமரின் அறிவிப்பால் குழப்பம்!!
அரசு ஊழியர்களுக்கு No Salaray., கார், வீடு வாங்க திடீர் தடை! பிரதமரின் அறிவிப்பால் குழப்பம்!!

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் பொருளாதார நிதி நிலை வீழ்ச்சி பெற்று வருவதால் மக்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் அரசிடமும் கையிருப்பில் போதிய நிதி இல்லாததால் அண்டை நாடுகளிடம் கையேந்தும் நிலை உருவாகியுள்ளது. எனவே IMF அமைப்பிடம் அமெரிக்க மதிப்பில் சுமார் 6.5 பில்லியன் டாலர் கடன் பெற விண்ணப்பித்தனர். இதை பரிசீலித்த IMF அமைப்பு முதல் கட்டமாக 1.1 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நாட்டின் விற்பனை வரி, அரசு செலவினங்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அரசு சார்பில் ஆடம்பர பொருள், வாகனம் வாங்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மாளிகை, அமைச்சரவை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கூட ஒரு வேளை மட்டும் உணவு வழங்க வேண்டும். அமைச்சரவையில் தேநீர் இடைவெளியில் தேநீர் மற்றும் பிஸ்கட் மட்டுமே வழங்கப்படும். அதேபோல் உறுப்பினர்களின் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படும். மேலும் மத்திய அமைச்சர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல விமானங்களில் எக்கனாமி பிரிவு மட்டுமே அனுமதி. முக்கிய பயணங்களில் அமைச்சர்களுக்கு உதவியாளர், 5 ஸ்டார் விடுதி முழுவதுமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுலாத் துறையில் வேலை., ரூ.25,000 முதல் ரூ.60, 000 வரை சம்பளம்! விவரங்கள் உள்ளே!!

கோடை காலங்களில் அரசு அலுவலகத்தில் மின்சாரம் கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும். அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்படாது. மேலும் பொது கூட்டங்களை தவிர்த்து கான்பரன்ஸ் கால் மீட்டிங்கேயே ஆதரிக்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுக்கு நாட்டில் அரசாங்க செலவில் எந்தவித புது கட்டிட நடவடிக்கைகளை அறவே தவிர்க்க வேண்டும். அதேபோல் அரசுக்கு சொந்தமான 300 டாலர் மதிப்புள்ள பரிசு பொருளை அமைச்சர்கள் வைத்திருக்க அனுமதி இல்லை”.என பல்வேறு கட்டுப்பாடுகளை பிரதமர் விதித்துள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்த நிதியாண்டு பட்ஜெட் தாக்கலில் மேலும் சலுகைகள் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அரசு துறை சார்ந்த செலவினங்கள் 15% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்புகளையும் கடந்து அமைச்சர் மற்றும் ஆலோசகர்கள் தங்களது ஊதியம் மற்றும் சலுகைகளை கைவிட முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here