![தலைவா யுவர் கிரேட்.! சக நடிகரை மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த விஜய் சேதுபதி.! தலைவா யுவர் கிரேட்.! சக நடிகரை மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த விஜய் சேதுபதி.!](https://enewz.in/wp-content/uploads/2020/03/123.jpg)
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி .தற்போது தன் சக நடிகர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாததை அறிந்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார். இதனை அறிந்த பலர் அவருக்கு நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நானும் ரவுடி தான்
![](https://enewz.in/wp-content/uploads/2020/03/tamil.jpg)
2015-ல் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி இணைந்து நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் லோகேஷ் பாபுவும் நடித்திருந்தார். இவர் ஒரு தனியார் காமெடி தொலைக்காட்சியில் இருந்தார். அதையடுத்து நானும் ரவுடி தான் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது ரசிக்கும் படியாகவும் இருந்தது.
![](https://enewz.in/wp-content/uploads/2020/03/ima.jpg)
தற்போது அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு இடது-வலது கை கால்கள் செயலிழந்தன. இதை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறியிருந்தனர். அறுவை சிகிச்சைக்காக அவருக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. இதனால் அவரது நண்பர் குட்டி கோபி என்பவர் முகநூலில் இதனை குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த விஜய் சேதுபதி அவரை மருத்துவமனையில் சென்று விசாரித்துள்ளார். இதனால் பலர் அவரின் மனிதாபிமானத்தை பாராட்டியுள்ளனர்.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |