![அப்படி போடு., லியோ பட இசை வெளியீட்டு விழா தேதி & இடம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்., இணையத்தில் வைரல்!! அப்படி போடு., லியோ பட இசை வெளியீட்டு விழா தேதி & இடம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்., இணையத்தில் வைரல்!!](https://enewz.in/wp-content/uploads/2023/08/ff-11-5.jpg)
கோலிவுட் திரையின் தளபதி என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் முன்னணி திரைபிரபலங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பல வருடங்களுக்கு பிறகு திரிஷா விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையில் ரிலீஸாகும் என்று படக்குழு தகவல் கொடுத்திருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதோடு இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அக்டோபர் 5 ஆம் தேதி மலேசியாவில் வைத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாம்.