Home செய்திகள் தகவல் தமிழக மக்களே., பண்டிகை முடிந்து சென்னைக்கு கிளம்பியாச்சா., கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் போக வேண்டாம்?

தமிழக மக்களே., பண்டிகை முடிந்து சென்னைக்கு கிளம்பியாச்சா., கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் போக வேண்டாம்?

0
தமிழக மக்களே., பண்டிகை முடிந்து சென்னைக்கு கிளம்பியாச்சா., கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் போக வேண்டாம்?

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையிலும் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதியுடன் கூடிய இப்பேருந்து நிலையத்தில் தென்மாவட்ட SETC மற்றும் மாநகர பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்த சூழலில் கோயம்பேடு உட்பட சென்னைக்குள் செல்லும் பயணிகள் பலரும் கிளாம்பாக்கத்தில் இறங்கி, மாநகர பேருந்துக்கு செல்ல வேண்டி செல்ல வேண்டியுள்ளது என கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல் வெளியாகி உள்ளது. அதாவது கிளாம்பாக்கத்திற்கு முன்னதாக பொத்தேரியில் இறங்கினால், அருகாமையிலே ரயில் நிலையம் உள்ளது. அங்கு தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, எழும்பூர், சென்ட்ரல், தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதாக கூறியுள்ளனர். இந்த வசதியை SETC பேருந்து பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு எகிறிய காய்கறி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here