கயல் சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம்?? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

கயல் நெடுந்தொடரில் தேவி கேரக்டரில் நடித்து வரும் அபிநவ்யா, சீரியலை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கயல் சீரியல்

சன் டிவியின் பிரபல சீரியல்களில் ஒன்றான கயல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று TRP யில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தொடரின் ஹீரோயினாக சைத்ரா ரெட்டியும், ஹீரோவாக சஞ்சய்யும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலோடு இந்த சீரியலை தினம் தினம் பார்த்து வருகின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த சீரியலில் ஹீரோயின் தங்கையாக அபிநவ்யா நடித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை இன்ஸ்டா மூலம் ரசிகர்களிடையே தெரிவித்தார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறினர். இந்த நேரத்தில் அவர் கயல் சீரியலை விட்டு விலக உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளிவந்தது.

ஆனால் அந்த விஷயம் உண்மை இல்லை என அவரே கூறியுள்ளார். அதாவது கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த பிறந்தநாள் விழாவில் தொடர்ந்து கயல் சீரியலில் நடிப்பேன் என்றும், இந்த தொடரில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அவர் சீரியலில் மாட்டார் நடிக்க மாட்டார் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கயல் சீரியலில் நடித்து வரும் அபிநவ்யா, பிரபல சின்னத்திரை நடிகர்களில் ஒருவரான தீபக்கை காதலித்த திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here