INDW vs AUSW : 157 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா…, தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள்!!

0
INDW vs AUSW : 157 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா…, தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள்!!
INDW vs AUSW : 157 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா…, தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள்!!

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கடந்த 21ம் தேதி முதல் தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை குவித்து இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எனவே 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ரிச்சா கோஷ் சிறப்பாக விளையாடி அசத்தினர். ஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தாலும், ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மா அரைசதம் அடித்தனர். இந்த நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 376 ரன்களை குவித்து 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து 3ஆம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here