சர்வதேச இந்திய அணியானது நாளை (நவம்பர் 23) முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை ஐசிசி டி20 யின் நம்பர் 1 பேட்ஸ்மேன்னான சூர்யகுமார் யாதவ் வழி நடத்த உள்ளார். உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணியிடம் இழந்துள்ள இந்திய அணி, அடுத்த வருடம் (2024) நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால், தற்போதிருந்தே இந்திய அணி தீவிரமாக தயார்படுத்தி கொள்வதற்காகவே, இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த இந்தியா மற்றும ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரை இந்தியாவின் நெட் அமர்வு நாளை இரவு 7 மணிக்கு இந்திய நேரப்படி ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பும் என அறிவித்துள்ளது.