Home செய்திகள் டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் வீரர்கள் கவனத்திற்கு…, ஐசிசி வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் வீரர்கள் கவனத்திற்கு…, ஐசிசி வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

0
டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் வீரர்கள் கவனத்திற்கு…, ஐசிசி வெளியிட்ட முக்கிய அப்டேட்!!
டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் வீரர்கள் கவனத்திற்கு..., ஐசிசி வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

டி20 உலக கோப்பை நடைபெற்று வரும் இந்நிலையில், ஐசிசி கொரோனா தொற்று குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஐசிசியின் புதிய அறிவிப்பு:

ஐசிசி சார்பாக டி20 உலக கோப்பை தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உட்பட 16 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன. இதில், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நமீபியா உட்பட 8 அணிகளுக்கிடையே தகுதி சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சலிங் (ஐசிசி) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதில், கொரோனா தொற்றுக்கான சோதனை மற்றும் அதற்கான தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை ஐசிசி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உலக கோப்பையில் பங்கேற்று விளையாடும் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தால், அந்த வீரர் போட்டிகளில் பங்கேற்காமால், தனிமைப்படுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரே ஓவரில் 3 விக்கெட் சாய்த்து அசத்தல்…, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்!!

தற்போது, ஒரு வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானாலும் கூட, போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தொற்று பாதித்த வீரர் போட்டிகளில் விளையாடுவது என்பது, அந்த அணியின் மருத்துவர் பரிசோதித்து கூறுவதை பொறுத்தே அமையும். இந்த அறிவிப்பானது, மாற்று வீரரை தேர்வு செய்ய ஏற்படும் காலதாமதத்தை குறைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here