சீரியலை விட்டு போகலாம்னு தோணுது.., கஷ்டமா இருக்கு.., கோபியின் திடீர் முடிவு – ரசிகர்கள் ஷாக்!

0

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமடைய முக்கிய காரணமே கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ் தான். அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் ஷாக்கில் உறைந்து போய் உள்ளனர். அந்த வீடியோவில் சதிஷ் சீரியலை விட்டு விலகுவது குறித்தும், அதற்கான காரணத்தை பற்றியும் பேசியுள்ளார்.

பாக்கியலட்சுமி கோபி

கோபி, பாக்கியாவின் கணவர் என்ற உண்மை ராதிகாவிற்கு தெரிய வந்ததில் இருந்து பாக்கியலட்சுமி சீரியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. உண்மை என்னவென்றால் இந்த சீரியல் எந்த அளவிற்கு பிரபலமடைந்ததோ, அந்த அளவிற்கு விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இடையில் இந்த சீரியல் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது எல்லாம் நாம் அறிந்ததே.

தற்போது கதை இன்னும் வேகமெடுக்க தொடங்கி உள்ளதால் நெட்டிசன்கள் சீரியல் குறித்த எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதிலும் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீசை நடிப்பையும் தாண்டி பெண்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இதனால் வருத்தமடைந்த சதிஷ், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அடுத்த 5 நாட்கள் சீரியல் ரொம்ப மோசமா இருக்க போது.

நான் தெரிஞ்சோ தெரியாமலோ கோபி கேரக்டர்ல உங்கள கஷ்டப்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சுருங்க, சிலர் பாராட்டுறாங்க, சிலர் திட்றாங்க. சில நேரங்கல்ல சீரியல விட்டு போலாம்னு தோனும், ஆனா எடுத்த காரியத்த முடிக்கணுன்னு சொல்லி இருக்கேன் என உருக்கமாக பேசி வீடியோவை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்க தான் அந்த கேரக்டருக்கு சரியான சாய்ஸ், சீரியல விட்டு போகாதீங்கனு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here